உறுமி நகரும் ஜன்னலின்
கண்ணாடிப் பரப்பில்
புலப்படாத தூரிகை ஒன்று
வரைந்து நகர்கிறது
உயர்ந்து, சரிந்து, விழுந்து வளைந்து ஓடும்
ஒற்றைக் கோட்டினை
அதன் கீழும் மேலும்
ஒரே நிறம்
புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே?