இந்த பதிவில் சமீபத்தில் நான் எழுதிய கவிதை உங்கள் பார்வைக்கு.
இதுவரைக்கும் கவிதை என்று நான் எழுதியவைகளை, நான் மட்டும் படிப்பதற்காகவே வைத்திருந்தேன். என்னை சுற்றி நிகழ்பவற்றினால் எனக்குள் எழும் மன எழுச்சிகளை பதிவு
செய்யும் வடிவமாய் அவற்றைப் பார்கின்றேன். இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.என்னைத் தவிர மற்றவர்களின் பார்வை எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் சிறிய ஆசை(பேராசையோ ?)
கவிதை-1
' தாழம் பூவே வாசம் வீசு '
- பாலுவின் குரல்,
நீர்க்குழாயின் தண்ணீர் சீறி
தரை தொடும் ஓசை,
வானம் கொட்டும்
இடி முரசு,
ஒற்றை நொடியில்
தற்செயலாய்
ஒரு இசைக்கலவை
மின்னழுத்த வேறுபாட்டால்
நின்று மீண்டும்
வானொலி தொடங்கிய
இடைவேளையில்......
கோடை மழை
தரை கொட்டும்
அந்தத் தருணம்.