இருட்டு பழகி
சாம்பல் பூத்திருந்த போது
கரிய திரை கிழித்து
வாசல் வழி
இருண்ட அறைக்குள்
அடர்ந்த நிறத்தொரு பூனை
தலை நுழைத்து
பின் உடல் நுழைத்தது
இருளைத் தற்காலிகமாய் வெளியேற் றி
திரை மீண்ட போது
பச்சை நிறத்து இரு
ஒளிப்புள்ளிகள் வெளியில்!
புத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக! சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா? அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே?