Friday, September 10, 2010

முல்லைப் பூவென........

முல்லைப் பூவென நினைத்தேனடி உன்னை 
என் முகம் கீறிப் போனதென்ன? 

காதல் செய்ததெந்தன் பிழையோ? - உன்னைக்
காணத் தவித்ததெந்தன் பிழையோ? 

உணர்வில் நிலைத்தவிட்ட பின்னே - எந்தன் 
உயிரில் கலந்துவிட்ட பின்னே

நீங்கிச் செல்வதென்பது சரியோ? - இதுகண் 
உறக்கத்தில் வந்த கனவோ?

நின் செல்லக் கரம்பிடித்துக்  கொண்டு  - நான்
செல்வேன் தூர தூரமென்று 

வண்ணக் கனவு கண்டிருந்தேன் - நான் 
காத்திருந்தேனடி பெண்ணே!

வண்ண ஓவியத்தில் நீர் விழுந்தே   எந்தன் 
கனவு கலைந்தது கண்டேன் !

வானம் தீரும் வரையும் என் - வாழ்வு 
தீரும் வரையும் உனக்காக 

காத்திருப்பேனடி உன் காதல் மீளுமென்று  - நான் 
காத்திருப்பேனடி உன் காதல் மீளுமென்று.



3 comments:

  1. //என் - வாழ்வு
    தீரும் வரையும் உனக்காக
    கத்திருப்பேனடி உன் காதல் மீளுமென்று// I Read two three time to get the meaning...But it's great style of writing. I really liked it.

    ReplyDelete
  2. நின் செல்லக் கரம்பிடித்துக் கொண்டு - நான்
    செல்வேன் தூர தூரமென்று
    "செல்லக் கரம்பிடித்துக்" very nice :)
    beautiful....

    ReplyDelete