போர்வையின் விலகளுக்குள்
நுழையும் பனி என நீ
தீண்டும்தோறும் தீண்டும்தோறும்
விழி திறக்கிறேன் நான் !
பனியாக நீ வெளி நிற்க
உறங்குகிறேன்
உள்ளே நான்!
உன்னை விலக்கிவிட்டதாய்
நினைக்கும் தோறும்
நிறைகின்றாய் என்னுள்
உன்னை விலக்குதல்
என் பாவனை
என்னை விலகுதல்
உன் பாவனை
அறிவோம் நாம்!
உள்ளே என்
அச்சமற்ற உறக்கமும்
வெளியே நீ
இருக்கும் காரணத்தால்...
இருந்தும் ஆடுகின்றோம்
மாயமான ஒரு திரையிட்டு
உன்னை விலக்குதல் போல்
உன்னுள் சிறையாகிறேன் நான் !
என்னை விலகுதல் போல்
என்னுள் நிறைகின்றாய் நீ !
good one
ReplyDeleteமிக்க நன்றி முனியாண்டி . ஒரு மிக சாதரனமானவனின் தொடக்கம் இது.
ReplyDelete