Saturday, July 3, 2010

வாசிப்பின் பயன் என்ன?

இலக்கிய வாசிப்பின் பயன் என்ன?

http://www.jeyamohan.in/?p=7290

எழுத்தாளர் ஜெயமோகனின் வலைத்தளத்தில் இந்த தலைப்பில் ஒரு இடுகை கண்டேன். அன்பர் ஒருவரின் கடிதம் அது.

நம்மை போன்ற பலரும் நமக்குள்ளும் மற்றவரோடும் பலமுறை விவாதித்திருக்கும் விஷயம் தான்.

வாசிப்பின் தொடக்க காலங்களில், வாசிப்பு என்னும் பெருஞ்சமுத்திர கரையில் நின்று கொண்டு, என்னை நனைத்து கொண்டிருந்த அலையோடும், நுரையோடும் உறவாடி கொண்டிருந்த போதுகளில், எனக்குள்ளே விவாதித்தவைகளைத் தான் அந்த கடிதத்தில் கண்டேன்.

இன்று அதை தொட்ட என் மீள் சிந்தனை...

இலக்கிய வாசிப்பு எதற்காக இல்லை வாசிப்பு என்பது எதற்காக? எதை நோக்கிய பயணம் இது?

இலக்கென்ன?

இதே கேளிவிகளை தான் வாழ்வோடும் தொடர்பு படுத்த முடிகிறது.

வாழ்வு என்பது எதை நோக்கி? இல்லை எதற்காக?

தொடரும் .....


வாசிப்பு

1 comment:

  1. உனது கிறுகல்களே என்னை எழுத தூண்டியது. அதன் பலனாய் எனது புதிய தேடல் தொடங்கிவிட்டது இந்த வலை பயணத்தில் "என் தேடலில்" . உனது வழிகாட்டுதல் வேண்டுகிறேன்.என்றும் உன்னை தொடரும் ஒரு வாசிப்பு ரசிகை.

    ReplyDelete