Wednesday, March 30, 2011

கூர்வாள்

கூரிய வாள் ஒன்று உண்டு
என்னிடம் 

அதை பத்திரமாய் வைத்திருக்கின்றேன்.

என் இதயத் தசைக்கோளங்களுக்குள் 
சொருகி

ஒரு புறம் குத்தி
மறு புறம் வெளிவந்திருக்கும் 
கூர் முனையில் 
சொட்டிக் கொண்டிருக்கும் 
தட் தட் என
உதிரத் துளிகள்

தேர்ந்த பிரபஞ்ச நடனதினுக்கொரு
தாளம் போல.





3 comments:

  1. குறியீடாய் எதை சொல்கிறீர்கள் என்றுப் புரியவில்லையே

    ReplyDelete
  2. நன்றி எல் கே. வருகைக்கும் பதிவிற்கும்.

    கூர்வாள் எதுவாகவும் இருக்கலாம் எல் கே. உயர்ந்த லட்சியமாக. கீழ்த்தரமான அசையாக. வாழ்க்கை முழுதும் போராடிச் சுமக்கும் கொள்கையாக, ஒரு சிறிய விருப்பமாக, காதலாக, நட்பாக, காமமாக. தேடலாக, தனிமையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நம்மை எப்பொழுதும் ரணப்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனாலும் இழக்க முடியாத கூர்வாள்.

    உதாரணங்கள் நிறைய உண்டு நண்பரே. ஒன்று : ராவணனுக்கு சீதை மேல் வந்த ஆசை.

    ReplyDelete
  3. காதலை இந்த கூரிய வாளோடு ஒப்பிட்டு கூறலாம்... மிகச் சரியாகப் பொருந்தும்....
    கவிதை அருமை அண்ணா...

    ReplyDelete