Friday, August 12, 2011

திரை




உறுமி நகரும் ஜன்னலின்
கண்ணாடிப் பரப்பில்

புலப்படாத தூரிகை ஒன்று
வரைந்து நகர்கிறது
உயர்ந்து, சரிந்து, விழுந்து வளைந்து ஓடும் 
ஒற்றைக் கோட்டினை
அதன் கீழும் மேலும் 
ஒரே நிறம் 
இருவேறு அடர்த்திகளில் 
நிறைய நிறைய 

சதுரப் பரப்பில்,
விழியின் உள்ளபடியான 
காட்சிப்புலத்தின் விட்ட அலகை 
விட்டமாகக் கொண்ட 
ஒரு உள் வட்டப் பரப்பின் 
காட்சியும் கண்ணும்
சந்திக்கும் அந்தச்சனத்தின் முன்
நிறைந்து விடுகிறது 
அந்தப் பரப்பும்
அந்த ஓவியத்தால்

அந்தத் திரை
விலக்கியோ, நகர்த்தியோ, கிழித்தோ
அப்'புறம்'
காண வழி ஒன்று உண்டா? 

No comments:

Post a Comment